fbpx
Homeபிற செய்திகள்கோவை இளம் தொழில் அதிபருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விருது

கோவை இளம் தொழில் அதிபருக்கு லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விருது

கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் கார்த்திக்குமார் சின்ராஜ்,லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி என்.ஆர்.ஐ. மகாத்மா காந்தி தமைலைத்துவ விருது பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

அர்ப்பணிப்பு, வேலை வாய்ப்பு வழங்குவது, சுற்றுச்சூழல் பாதுகாத்தல் என பல்வேறு தனி மனித தலைமைபண்பு அடிப்படையில் வழங்கப்படும் விருது இந்த ஆண்டு கோவையை சேர்ந்த இளம் தொழில் முனைவோர் கார்த்திக் குமார் சின் ராஜ் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

லண்டனில் நடை பெற்ற நிகழ்ச்சியில் விருதை பெற்று கொண்ட கார்த்திக் குமார் கோவை திரும்பிய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, தமது 5 கே கார் கேர் எனும் நிறுவனத்தின் வாயிலாக மிக குறைந்த காலத்தில் இளைஞர்களுக்கு குறிப்பாக முதல் தலை முறையினருக்கு வேலை வாய்ப்புகளை அதிகம் வழங்கி உள் ளோம்.

குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டதாக கூறிய அவர்,தொழில் வாய்ப்புகளை வளர்ப்பதோடு சமூக நலன் சார்ந்த பணிகளில் தான் மட்டுமின்றி தமது ஊழியர்களுக்கும் பயிற்சி அளித்து வருவதாக தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக சாலையோர நாய்களுக்கு பாதுகாப்பு அளித்து சிகிச்சை அளித்து வருவதை குறிப்பிட்ட அவர், தொழில் முனைவோராக இந்த ஆண்டு மகாத்மா காந்தி லீடர்ஷிப் விருதை பெற்றதில் தமிழராக தாம் பெருமைபடுவதாக பெருமிதம் தெரிவித்தார்.

முன்னதாக லண்டனில் இருந்து கோவை திரும்பிய அவருக்கு 5 கே கார் கேர் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img