fbpx
Homeபிற செய்திகள்எம்.எஸ்.தாதா அறக்கட்டளையின் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்தி இன்குளூசிவ் விளையாட்டுப் போட்டிகள்

எம்.எஸ்.தாதா அறக்கட்டளையின் மாற்றுத்திறனாளிகளுக்கான முக்தி இன்குளூசிவ் விளையாட்டுப் போட்டிகள்

எம்.எஸ்.தாதா அறக்கட்டளையின் முக்தி திட்டம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான ‘முக்தி இன்குளூசிவ் விளையாட்டு போட்டிகள்’ மீனம் பாக்கத்தில் உள்ள ஏ.எம். ஜெயின் கல் லூரியில் நடைபெற்றது.

இந்த போட்டிகளை சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் மற்றும் மோகன் கோயங்கா அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் மோகன் கோயங்கா ஆகியோர் துவக்கி வைத்தனர். மகேந்திர தாதா (முக்தியின் இணை நிறுவனர் – அறங்காவலர்), எம்.எஸ். தாதா அறக்கட்டளை வரவேற்பு உரையுடன் நிகழ்வு தொடங்கியது.

இதில் மீனா தாதா (முக்தியின் நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்) எம்.எஸ். தாதா அறக்கட்டளை) கூறுகை யில், “முக்தி 38 ஆண்டுகள் நிறைவ டைந்துள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் போலி யோவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணன், மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை எடுத்துரைத்து, முக்தி குழுவினருக்கு சிறப்பு நன்றி கூறினார். முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

சக்கர நாற்காலி கூடைப்பந்து, 100 மீட்டர் டிராக் நிகழ்வு, யுனிவர்சல் ரிலே மற்றும் பல்வேறு கள நிகழ்வுகள் போன்ற பல்வேறு தகவமைப்பு விளையாட்டு நடவடிக்கைகளின் மூலம் பங்கேற் பாளர்கள் தங்கள் திறமைகளையும் உறுதியையும் வெளிப்படுத்தினர்.

இவர்களில் 4-5 பங்கேற்பாளர்கள் எதிர் வரும் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img