fbpx
Homeபிற செய்திகள்மதுரையில் கைத்தறி கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

மதுரையில் கைத்தறி கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு அரசு கைத்தறித்து றையின் சார்பாக 9 வது தேசிய கைத்தறி தின விழா மதுரை விஸ் வநாதபுரம் பகுதியில் உள்ள ரோட்டரி ஹாலில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் மாவட்ட அளவிலான சிறப்பு கைத்தறி கண்காட்சி மதுரை சரக கைத்தறித்துறை சார்பாக நடைபெற்றது. இவ்விழாவினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

நெசவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், குழந்தைகளுக்கான மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, சர்க்கரை நோய், இரத்தம், சளி, சிறுநீர் பரிசோதனை உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் 232 நபர்களுக்கு மருத்துவ குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இவ்விழாவில் கைத்தறி நெச வாளர்களுக்கான முத்ரா கடன் திட்டத்தின் கீழ் தகுதி பெறும் 12 நெசவாளர்களுக்கு முத்ரா கடன் ரூ.7.50 லட்சமும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரின் மானிய கோரிக்கை அறிவிப்புக்கிணங்க நெசவாளர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஒரு ரூ.2.88 லட்சமும் மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டு முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவரால் மரம் நடும் விழா நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சியில் மதுரை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர்களால் நெசவு செய்யப்பட்ட கைத்தறி ஜவுளிகள் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஜவுளிகள் விற்பனைக்கு காட்சிப் படுத்தப்பட்டது.

மதுரை நிலையூர் கைத்தறி நகர் பகுதியில் உள்ள நெசவாளர் அல்லாத கல்லூரி படிப்பு முடித்த 15 பயனாளிகளுக்கு கைத்தறி நெசவு சம்மந்தமான தொழில் முனைவு நெசவு பயிற்சி வழங்கப்பட்டது. டி.குன்னத்தூர் முருகன் தொழிலியல் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் மரம் நடுவிழா, மற்றும் 10 பயனாளிகளுக்கு தொழில் முனைவு நெசவுப் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் மதுரை சரக கைத்தறி துறை உதவி இயக்குநர், பட்டு வளர்ச்சி துறை உதவி இயக்குநர், கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர், பாங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி மேலாளர்கள், தொழில் முனைவோர் மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள், கைத்தறித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img