fbpx
Homeபிற செய்திகள்‘மக்களைத் தேடி மருத்துவம்’: தேடிவந்த உலக அங்கீகாரம்!

‘மக்களைத் தேடி மருத்துவம்’: தேடிவந்த உலக அங்கீகாரம்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால்2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ’மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற மகத்தான திட்டம் தொடங்கப்பட்டது.

தொலைதூரக் கிராம மக்கள் மருத்துவர்களைத் தேடி வரவேண்டியதில்லை; அந்த மக்களைத் தேடி மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக இந்த மகத்தான திட்டம் உருவாக்கப்பட்டது.

இல்லங்களுக்கே சென்று இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற அனைத்து தொற்றா நோய்களுக்கு பரிசோதனைகள் செய்து, அதற்கான மருந்துகள் வழங்கப்படுகின்றன.
தேவைப்படுபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்குத் தேவையான பிசியோதெரபி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள், ஆலோசனைகள் வழங்கபடுகின்றன.

கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக 632 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 85 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.

இந்நிலையில், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பின் 2024-ஆம் ஆண்டிற்கான விருது (United Nation Interagency Task Force Award ) கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டம், மக்களைத் தேடி மருத்துவ திட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சமூகவலைதள பதிவில், ”இந்தியத் துணைக் கண்டத்துக்கே முன்னோடித் திட்டமாக நமது திராவிட மாடல் அரசில் செயல்படுத்தப்பட்டுள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு உலக அங்கீகாரம் தேடி வந்திருக்கிறது. இந்தத் திட்டம் இன்னும் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பதைத் தொடர்ந்து உறுதிசெய்வோம்“ என தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருவரது இல்லத்துக்கும் சென்று மருத்துவச் சேவைகளை வழங்கும் இந்தத் திட்டம், சமூகத்தில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் தான் இந்த விருது என்றால் மிகையன்று.

இதன் பெருமை முதலமைச்சருக்கு மட்டுமல்ல மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை முழு கண்காணிப்புடன் செம்மையாக செயபடுத்தி வரும் சுகாதாரத்துறை அமைச்சர் மு.சுப்பிரமணியன் மற்றும் துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவரையும் சேரும்.

காலை உணவுத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் போன்ற திட்டங்களை முன்னெடுத்து பிற மாநிலங்களுக்கெல்லாம் வழிகாட்டிக் கொண்டிருக்கும் தமிழக அரசின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் இந்த ஐ.நா. விருது மூலம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறந்த முதல்வர் என இந்தியாவே போற்றி வரும் நிலையில் இப்போது உலகமே பாராட்டி அங்கீகாரம் கொடுத்திருக்கிறது என்றால்இதைவிட தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பது வேறென்ன?

தமிழ்நாடே முதல்வர் மு.க.ஸ்டாலினை வாழ்த்துகிறது. நாமும் அதில் இணைந்து கொள்வோம்.

வாழ்த்துகள்!

படிக்க வேண்டும்

spot_img