fbpx
Homeபிற செய்திகள்உடல், மனதளவில் வலிமையானவர்களை தேர்வு செய்ய மாரத்தான் போட்டி: 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி

உடல், மனதளவில் வலிமையானவர்களை தேர்வு செய்ய மாரத்தான் போட்டி: 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ. பயிற்சி

உடல் மற்றும் மனதளவில் வலிமையானவர்களை தேர்வு செய்ய மாரத்தான் போட்டியை நடத்தி, இந்தியாவை வல்லரசு நாடாக மாற்ற 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும் என்று வால்ரஸ் டேவிட்- ரேவதி மெடிக்கல் சென்டர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி கூட்டாக தெரிவித்தனர்.

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் வால்ரஸ் நிறுவனம் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பு, பின்னலாடை தொழிலில் திருப்பூரை உலக அளவில் முதன்மையானதாகவும், மிகப்பெரிய சந்தையாகவும் மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதற்காக இளைஞர்கள், பெண்களுக்கு இலவச பயிற்சிகளையும், உதவி களையும் வழங்கி, அவர்களை தொழில்முனைவோர்களாக மாற்றி வருகிறது.

இந்த நிலையில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே உலக அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இந்தியா முதன்மையான நாடாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இளைஞர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சியை வழங்க வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பை சேர்ந்த குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த பயிற்சியை பெறுவதற்கான நபர்களை தேர்வு செய்வதற்காக ரேவதி மெடிக்கல் சென்டருடன் இணைந்து மாரத்தான் போட்டியும் இந்தியா முழுவதும் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருப்பூரில் உள்ள எஸ் இந்தியா கேன் அமைப்பு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இதில் வால்ரஸ் மற்றும் எஸ் இந்தியா கேன் அமைப்பின் நிறுவனத்தலைவர் ஜி.எஸ்.பி.டேவிட், ரேவதி மெடிக்கல் சென்டர் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஈஸ்வர மூர்த்தி, எஸ் இந்தியா கேன் அமைப்பில் உள்ள முன்னாள் ஆசிய தடகள வீரர் சார்லஸ் பொரோமியோ, முன்னாள் சர்வதேச உயரம் தாண்டுதல் வீரர் நல்லசாமி அன்னாவி, முன்னாள் சர்வதேச டிரிபிள் ஜம்ப் வீரர் நிஜாமுதீன், தகவல் மற்றும் மார்க்கெட்டிங் ஆலோசகர் வசந்த் டேவிஸ், திருப்பூர் பயிற்சியாளர் அழகே சன், ஆண்டன் கிளாத்திங் முதன்மை செயல் அலுவலர் விஜய், ஆர்.கே. குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் நிவேதா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புவரை பாலியெஸ்டர் ஆடைகள், துணிகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது பாலியெஸ்டர் இல்லையென்றால் திருப்பூர் மட்டுமின்றி உலகமே இயங்காது என்ற அளவிற்கு மாறி உள்ளது. எனவே தைவான், சிங்கப்பூர், துபாய் போன்று மிகப்பெரிய சந்தையாக மாற வேண்டும். அப்படி மாறினால் தொழில் 100 மடங்கு அதிகரிக்கும்.

உலக அளவில் உள்ள 10 நிறுவ னங்களில் நமது நிறுவனம் இடம்பெற வேண்டும். இந்தியாவில் அதற்கான மிகப்பெரிய வாய்ப்பு மக்கள் தொகையாகும். படித்தவர்கள், இளைஞர்கள் அதிக அளவில் உள்ளனர்.

உலக அளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அதுதொடர்பான விழிப்புணர்வை நாம் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துபவர்களும், மற்றவர்களை பயன்படுத்த வைப்பவர்களும் உலக அளவில் உயர்ந்த இடத்தை அடைய முடியும். எனவே இந்தியாவில் உள்ள இளைஞர்களும், மக்களும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது இந்தியா தானாகவே வல்லரசு நாடாக மாறும்.

இதற்காக 5 லட்சம் பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை நமது குழுவில் இணைப்பதுடன், அவர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சியை வழங்க உள்ளோம். முதற்கட்டமாக 50 இளைஞர் களை தேர்வு செய்து, அவர்களுக்கு செல்போனுடன் கூடிய 3 மாத பயிற்சியியும், பின்னர் ஆண்டு அடிப்படையில் ஊதியமும் நிர்ணயிக்கப்படும்.

பயிற்சி பெறுவதற்கு தகுதியான நபர்களாக உடல் மற்றும் மனதளவில் வலிமையாக உள்ள இளைஞர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இதன்படி மாரத்தான் போட்டிகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்ய உள்ளோம். 2 ஆண்டுகளில் பலகட்ட மாரத்தான்களை நடத்தி, அதை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் பொதுமக்கள் அனைவரையும் இணைத்து கொண்டு செல்கிறோம்.

மாரத்தான் போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கான பதிவுக்கட்டணத்தை தன் னார்வ அமைப்புகள் பொறுப் பெடுத்துக் கொள்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். குணநலன் மற்றும் உடல் ஆரோக்கியம் நல்ல மகிழ்ச்சியான, ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்பதே நமது நோக்கமாகும்.

வரும் ஜறன் மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை இந்த மாரத்தான் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதேபோல் திருப்பூர் மக்கள் பொருளாதாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் இருந்து வெளிவருவதற்கான மற்றொரு நிகழ்ச்சி ஜூலை மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும்.

இந்த ஆண்டு மட்டுமின்றி ஆண்டுதோறும் அதே மாதங்களில் இந்த நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்துள்ளோம். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தும்போது இளைஞர்களுக்கு வாழ்க்கையில் முன்னேறுவதற்கான சிறந்த வாய்ப்பு ஏற்படும். அதில் கலந்து கொள்ப வர்களுக்கு ஏற்றவாறு நடுவர்கள் தேவைப்படுவார்கள்.

தகுதி வாய்ந்த நடுவர்களை தேர்வு செய்து நியமித்து நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதுடன், திறமையான நபர்களை கண்டறிந்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் பயன்படுத்த உள்ளோம். மாரத்தானுக்கு அப்பாற்பட்டு, விளையாட்டில் ஆர்வமுள்ளவர்களையும் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

முதற்கட்டமாக திருப்பூரிலும், பின்னர் தமிழ்நாடு முழுவதும், அதைத் தொடர்ந்து தேசிய, சர்வ தேச அளவிலானபோட்டி யாக நடத்தப்படும். ஏ.ஐ. தொழில்நுட்பத்திற்கு மாறும் போது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதீத வளர்ச்சி ஏற்படும். இதை நமது நாட்டின் வளர்ச்சிக்காக செய்யும்போது நமக்கும் பலன் கிடைக்கும்.

மாரத்தான் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்ப பயிற்சி தொடர்பாக ஆர்வமுள்ளவர்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள வால்ரஸ், எஸ் இந்தியா கேன் அமைப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img