fbpx
Homeபிற செய்திகள்புரோஜோன் மால் சார்பில் கோவையில் நாளை மாரத்தான் ஓட்டம்

புரோஜோன் மால் சார்பில் கோவையில் நாளை மாரத்தான் ஓட்டம்

கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள புரோஜோன் மால் சார்பாக வருகிற 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.30 மணிக்கு மாரத்தான் ஓட்டம் நடைபெறவுள்ளது.
இந்த மாரத்தான் ஓட்டம் மக்களிடையே இயற்கை பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பதைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு நடைபெறவுள்ளது.

இதில் சுமார் 5000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் பங்கு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாரத்தான் மூன்று பிரிவுகளாக அதாவது 1 கிமீ ஓட்டம் குழந்தை களுக்காவும் 5 கிமீ ஓட்டம் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருவருக்காகவும் 10 கிமீ ஓட்டம் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்,பெண் இருவருக்காகவும் என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த தொடர் ஓட் டத்தில் பங்குபெறும் அனைவருக்கும் டீ சர்ட், பதக்கம், சான்றிதழ் மற்றும் காலை உணவும் வழங்கப்படுகிறது. இந்த ஓட்டதிற்கான கட்டணம் 299 ரூபாய் என நிர்ண யிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கட்டணமில்லாமல் இந்த மாரத்தானில் பங்கு பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வெறும் 150 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாரத்தானில் மூன்று பிரிவுகளில் வெற்றி பெறும் ஆண், பெண் மற்றும் குழந்தைகளுக்கு பிரிவு வாரியாக ரூ.2 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது.

சிறப்பு விருந்தினர்களாக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், நடிகர் சந்தோஷ் பிரதாப், கோயம்புத்தூர் தடகள சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், டாக்டர் சுமன் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடக்கி வைக்கிறார்கள் மேற்கண்ட தகவலை புரோசோன் நிதி நிர்வாகம் ஏ.ஜி.எம்.பாபு, புரோசோன் எச்.ஓ.டி. ப்ரிங்ஸ்டன் நாதன் மற்றும் ஆபரேஷன் எச்.ஓ.டி.முஸம்மில் செல்வி சுபத்ரா தேவி ஆகியோர் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img