fbpx
Homeபிற செய்திகள்விழா காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி ஆல்டோ கே10 தள்ளுபடி விலையில் விற்பனை

விழா காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி ஆல்டோ கே10 தள்ளுபடி விலையில் விற்பனை

விழா காலத்தை முன்னிட்டு மாருதி சுசுகி ஆல்டோ கே10 (VXi) மற்றும் S-Presso (LXi) கார்களுக்கு அற்புதமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் விற்பனை மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி கூறுகையில், “விழா காலத்தை முன்னிட்டு ஆல்டோ கே10 (VXi) மற்றும் S-Presso (LXi) மாடல்களின் விலைகளை குறைத்துள்ளோம்“ என்றார்.

தமிழ்நாட்டில், எக்ஸ்-ஷோரூம் விலையில் ரூ.5 லட்சத்திற்கும் குறைவான கார்களுக்கு 12% சாலை வரி விதிக்கப்படுகிறது, மேலும் ரூ. 5 லட்சத்திற்கும் அதிக விலை கொண்ட வாகனங்களுக்கு 13% சாலை வரி விதிக்கப்படுகிறது.

இந்த விலைக் குறைப்பு இரண்டு மாடல்களின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ. 5 லட்சத் திற்கும் குறைந்த வரம்பிற்குள் கொண்டு வருகிறது. குறைந்த சாலை வரியின் கூடுதல் நன்மையாக ஆல்டோ K10 (VXi) காருக்கு ரூ. 5840/- மற்றும் S-Presso (LXi) காருக்கு ரூ. 5,255/- கிடைக்கும்.

விலை குறைப்பு மற்றும் சாலை வரி ஸ்லாப்பில் மாற்றம் ஆகியவற்றின் கூட்டுப் பயன் என்னவென்றால், கார் வாங்குபவர்கள் ஆல்டோ K10 (VXi)யில் ரூ.12,340 மற்றும் ரூ.7,255 S- Presso (LXi) -இல் பெறுகிறார்கள்.

படிக்க வேண்டும்

spot_img