fbpx
Homeபிற செய்திகள்குவாட்ரியா கேப்பிட்டலில் இருந்து ரூ.1300 கோடி திரட்டும் மேக்சிவிஷன் மருத்துவமனை

குவாட்ரியா கேப்பிட்டலில் இருந்து ரூ.1300 கோடி திரட்டும் மேக்சிவிஷன் மருத்துவமனை

ஆசியாவின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்பு சார்ந்த தனியார் பங்கு நிறுவனங்களில் ஒன்றான குவாட்ரியா கேபிடல் (“குவாட்ரியா”) நிறுவனமானது, இந்தியாவின் முன்னணி மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தனியார் கண் பராமரிப்பு கிளினிக்குகளில் ஒன்றான மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனையில் (“Maxivision”) ரூ. 1,300 கோடி வரை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது.

குவாட்ரியா சிறிய பங்குகளுக்காக சுமார் ரூ.600 கோடிகளை ஆரம்ப முதலீட்டையும், கூடுதல் பங்குகளுக்காக ரூ.700 கோடிகள் வரையிலான முதலீட்டையும் செய்யும்.

இந்தியாவில் கண் பராமரிப்புக்கான வளர்ந்து வரும் தேவையை அளவிடுவதற்கும், சேவை செய்வதற்கும் மேக்ஸிவிஷன் மருத்துவமனையின் திறனை ஆதரிக்க, கண் பராமரிப்பு சேவைகள் துறையில் மிகப்பெரிய முதலீட்டினை மேற்கொள்கிறது.

1996-ம் ஆண்டு நிறுவப்பட்ட மேக்ஸிவிஷன் ஆனது தென் மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் ஆறு மாநிலங்களில் 42 மையங்களைக் கொண்டு இயக்குகிறது.

கண்புரை அறுவை சிகிச்சை, லேசிக் மற்றும் ரெலெக்ஸ் ஸ்மைல் சிகிச்சைகள், விழித்திரை பிரச்சனைகளுக்கான சிகிச்சைகள் மற்றும் கிளைக்கோமா, ஓக்குலோபிளாஸ்டி அத்துடன் பிறந்த குழந்தை மற்றும் குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு போன்ற முழுமையான கண் பராமரிப்பு சேவைகளை நிறுவனம் வழங்குகிறது.

மேக்சிவிஷன் நிறுவனத்தின் தலைவரான டாக்டர் ஜி.எஸ்.கே.வேலு பேசும்போது, “கடந்த சில ஆண்டுகளாக எங்கள் வணிகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இன்று நாம் குறிப்பாக தெற்கு மற்றும் மேற்கு இந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் மற்றும் மிகவும் நம்பகமான கண் பராமரிப்பு வழங்குநர்களில் ஒருவராக இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img