fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவ உதவியாளர் கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் மருத்துவ உதவியாளர் கருத்தரங்கு

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா மருத்துவமனை இணை மருத்துவ அறிவியல் கல்லூரி மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து மருத்துவர் உதவியாளர்கான கருத்தரங்கம் “PA NEXUS 2024: Pathway for Versatile PA Practice “ என்ற தலைப்பில் நடத்தியது.

இந்த கருத்தரங்கினை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமையேற்று நடத்தி னார்.

இதில், சிறப்பு விருந்தினராக சிறுநீரக மருத்துவர் மற்றும் உயர் ஆலோசகர் டாக்டர் செழியன் குத்துவிளக் கேற்றி துவக்கி வைத்தார்.

அறுவை சிகிச்சை மருத்துவர் மற்றும் உயர் ஆலோசகர் டாக்டர் சர்வேஸ்வரன் விழா கருப்பொருளை வெளியிட்டார்.

தலைமை நிர்வாக அதிகாரி ராம்குமார், மருத்துவ இயக்குநர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் அழகப்பன் , இணை மருத்துவ அறிவியல் கல்லுரியின் முதல்வர் சத்யா ஆகியோர் விழாவிற்கு முன்னிலை வகித்தனர்.

இந்தக் கருத்தரங்கில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்களான லோகநாதன், ஐம்புலிங்கம், முருகேஷ், கோகுல கிருஷ்ணன், வேதநாயகம், பானுமதி, ஷோபி ஆனந்தி ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இணை மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img