ஈரோடு ஈபிபி நகர் பகுதியில் ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 45 ஆண்கள் 40 பெண்கள் அணிகள் பங்கேற்றன. ரூ 1 லட்சத்துக்கும் மேல் பரிசு வெற்றி பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது.
மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, ஈரோடு தெற்கு பாஜக மாவட்ட தலைவர் வேதானந்தம் , மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் செல்வமணி, நிர்வாகிகள் வைதேகி, சிவக்குமார், சரவணன், ஜி.வெங்கடேசன், விஜய்(எ) கோவிந்தராஜ், குரு குணசேகரன், பொன்னுராஜ், விஸ்வபாலாஜி, பிரதீமா சுரேந்திரன், புனிதம் ஐய்யப்பன், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.