இன்று உலக மனநல தினத்தை முன்னிட்டு தென்காசி குற்றாலம் சாலையில் நன்னகரத்தில் அமைந்துள்ள போதி மனநல மருத்துவமனை சார்பில் மனநல விழிப் புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச் சிக்கு போதி மனம் மருத் துவமனை நிறுவனர் மருத் துவர் கார்த்திக் துரைசாமி தலைமை வகித்தார். மருத்துவர் நீலவேணி கார்த்திக் முன்னிலை வகித்தார்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் வாசலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியின் போது மனநல மருத்துவர் கார்த்திக் துரைசாமி மனநலம் குறித்தும் மனநலத்தை எவ்வாறு காப்பது என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப் புணர்வு உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து காசி விஸ்வநாதர் கோவில் வாசல் முதல் புதிய பேருந்து நிலையம் வரை சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
மனநலம் குறித்த விழிப் புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் மாணவ மாண விகள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பின்னர் புதிய பேருந்து நிலையம் பகு தியில் பொது மக்களுக்கு மன நலம் குறித்த விழிப்புணர்வை மருத்துவர் கார்த்திக் துரைசாமி எடுத்துரைத்தார்.
பின்னர் கிரீன் பார்க் பள்ளி மாணவ மாணவிகள் மனநலம் குறித்த விழிப்புணர்வு உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் தென்காசி கிரீன் பார்க் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ மாணவிகள் தென்காசி சென்ட் மேரிஸ் நர்சிங் கல்லூரி மாணவிகள் தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் நர்சிங் கல்லூரி மாணவிகள் மற்றும் போதி மன மருத்துவமனை பணியாளர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.