fbpx
Homeபிற செய்திகள்எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் ரஷ்யா - இந்தியா நல்லுறவு கலாச்சார நடனம்

எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் ரஷ்யா – இந்தியா நல்லுறவு கலாச்சார நடனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எஸ்.எஸ்.வி.எம் பள்ளியில் இந்திய – ரஷ்யா நல்லுறவுக்கான கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

பள்ளியின் அறங்காவலர் மணிமேகலை மோகன்,நிர்வாக அறங்காவலர் மோகன்தாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய நாட்டினை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று தங்களது நாட்டின் பல்வேறு கலாச்சார நாட்டிய நடனங்களை மேடையில் அரங்கேற்றினர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் பூவே சென் பூவே மற்றும் மஸ்தானா, மஸ்தானா ஆகிய பாடலுக்கு ரஷ்யா நாட்டு கலைஞர்கள் நாடனமாடினர் இதனை பார்வையாளர்களாக அமர்ந்திருந்த மாணவர்கள் கரகோ ஷங்களை எழுப்பி கலைஞர்களை உற்சாகபடுத்தினர்.

மேலும் இந்தியா- ரஷ்ய நாட்டு கலாச்சாரத்தை தமிழ்நாடு மாணவர்களுக்கு எடுத்து கூற வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து 20வது ஆண்டாக இந்தியாவிற்கு சுற்றுபயணம் வந்துள்ளதாகவும், தொடர்ந்து பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் இம்மாத இறுதி வரை ரஷ்ய கலாச்சார நடன நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளதாக கலாச்சார குழுவின் தமிழ்நாடு ஒருங்கினைப்பாளர் தங்கப்பன் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து ரஷ்ய கலைஞர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாரம்பரிய முறைப்படி மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் நினைவு பரிசு வழங்கி பள்ளி அறங்காவலர் நிர்வாக அறங்காவலர் பாராட்டு தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img