fbpx
Homeபிற செய்திகள்நோயாளிக்கு உள்ளுறுப்பு மாற்று சிகிச்சை செய்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை

நோயாளிக்கு உள்ளுறுப்பு மாற்று சிகிச்சை செய்து எம்ஜிஎம் ஹெல்த்கேர் சாதனை

எம்ஜிஎம் ஹெல்த்கேர் பல உள்ளுறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து சாதனைப்படைத் திருக்கிறது.

பல்வேறு பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த கேரளாவைச் சேர்ந்த 32 வயதான ஒரு நோயாளியின் உயிரை இச்சிகிச்சையின் மூலம் எம்ஜிஎம் ஹெல்த்கேரின் மருத்துவர்கள் குழு காப்பாற்றியிருக்கிறது.

இச்சிகிச்சைக்குப் பிறகு நோயாளி நலமுடன் உள்ளார். இந்த எம்.எம்.வி.டி அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் குழுவிற்கு பல உள்ளுறுப்புகள் மற்றும் அடிவயிறு உறுப்புமாற்று சிகிச்சை மையத்தின் தலைவர் மற்றும் இயக்குனர் டாக்டர். அனில் வைத்யா தலைமை வகித்தார். இக்குழுவில் பல்வேறு உள்ளுறுப்புகள் மற்றும் அடிவயிறு உறுப்பு மாற்று சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். செந்தில் முத்துராமன், புற்றுநோய் அறுவை சிகிச்சைப் பிரிவின் முதுநிலை நிபுணர் டாக்டர். சிவக்கு மார் மகாலிங்கம் மற்றும் உள்ளுறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் நிபுணர் டாக்டர். வெங்கடேஷ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

அத்துடன், இச்சிகிச்சையின் வெற்றிக்கு உதவிய மயக்கவியல் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த டாக்டர். தினேஷ் பாபு மற்றும் டாக்டர். நிவாஷ் சந்திரசேகரன் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து புரொஃ பசர் டாக்டர். அனில் வைத்யா கூறுகையில், “திருத்தப்பட்ட பல உள்ளுறுப்பு மாற்று சிகிச்சையை இவருக்கு செய்தோம்.
இந்த சிகிச்சை வெற்றியடைந்திருப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img