மில்கி மிஸ்ட் நிறுவன பால் பொருட்கள், எஸ்ஐஜி நிரப்பு தொழில்நுட்பம் மூலம் பேக்கிங் செய்வதால் பால் பொருட்களின் தரத்தை மேலும் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
எஸ்ஐஜி என்பது மிகச் சிறிய பேக்கிங் முறையை வழங்கும் அடிப்படையை கொண்டது. இது மேம்படுத்தப் பட்ட நிரப்பு தொழில்நுட்பத்தை தற்போது மில்கி மிஸ்ட் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. தென் இந்தியாவில் பால் உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த தொழில்நுட்பத்தை வழங்குவதன் மூலம் தனது உற்பத்தியை அதிகரிக்கவும், நுகர்வோருக்கு புதுமையான பேக்கிங் அனுபவத்தை வழங்கவும் உள்ளது.
ஈரோடு அருகே மில்கி மிஸ்ட் உற்பத்தி ஆலையில் SIG Smile Small 24 Aseptic, SIG Midi 12 Aseptic, SIG XSlim 12 Aseptic ஆகிய 3 விதமான எஸ்ஐஜி பேக்கிங் தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவியுள்ளது. சிக்கலான அமைப்புகள் இல்லாமல் எளிதில் திறந்து மூடும் வகையில் பேக்கிங்கை வழங்குவதால் செயல்திறன் அதிகரித்து செலவு மிச்சப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா, வங்கதேசத்தின் எஸ்ஐஜி தலைவர் வந்தனா தண்டன் கூறுகையில், சந்தையில் உள்ள மற்ற அமைப்புகள் போல் இல்லாமல் எஸ்ஐஜி அட்டைப் பெட்டிகள் பிளாட் பேக் செய்யப்பட்ட ஸ்லீவ்களாக வழங்கப்படுகிறது. இந்த நிரப்பு செயல்முறை உற்பத்தி பொருளை கெடாமல் பாதுகாக்க உதவுகிறது என்றார்.
மில்கி மிஸ்ட் நிர்வாக இயக்குநர் சதீஷ்குமார் கூறுகை யில், நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் உயர்தர பால் பொருட்களை வழங்குவதற்கு எல்லாவிதத்திலும் எஸ்ஐஜி பேக்கிங் தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றார்.
மில்கி மிஸ்ட் தலைமை நிர்வாக அதிகாரி கே.ரத்தினம் கூறுகையில், மில்கி மிஸ்ட் தன் நிலையான அர்ப்பணிப்பா லும், மெருகூட்டப்பட்ட தயாரிப் பாலும் தனித்துவமிக்க தரத்தை வழங்குவதோடு, பேக்கிங் கில் திறன்மிக்க எஸ்ஐஜி யின் ஒத்துழைப்பையும் செயல்படுத் துகிறது என்றார்.