தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் ஏப். 18 முதல் 29 வரை முதல்வர் மருத்துவ காப்பீடு திட்ட சிறப்பு முகாம் நடைபெறும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்
தூத்துக்குடி மாநகராட் சிக்கு உட்பட்ட 29, 30, 31 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் காப்பீடு அட்டை பதிவு செய்ய ஏப்.18 மற்றும் 19 ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் பதிவு செய்யலாம் என்று தெரி விக்கப்பட்டது.
இந்நிலையில் தூத்துக் குடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களிடம் முதல்வரின் மருத்துவ காப்பீட்டுக்கான விண் ணப்ப படிவங்களை பெற்று முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை நிவர்த்தி செய்து அதற்கான காப்பிடு அட்டை பெறு வதற்கான சான்றிதழ் களை பயனாளிகளுக்கு வழங்கினார். பின்னர் பயனாளிகளிடம் முதல் வரின் மருத்துவ காப்பிடு அட்டையை ஒரு வாரங் களில் சட்டமன்ற அலு வலகத்தில் வந்து பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் மாநகர தி.மு.க செயலாளர் ஆனந்தசேகரன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அண்ணாநகர் பகுதி செய லாளர் ரவீந்திரன், 30 வது வார்டு வட்ட செயலாளர் செந்தில்குமார், கவுன்சிலர் கள் அதிஷ்டமணி, கனக ராஜ், வட்ட செயலாளர் பாலகுருசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.