fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

கோவை ஜிகேஎன்எம் மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ அவசர சிகிச்சை பிரிவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்

கோவை ஜி.கே.என் எம் மருத்துவமனையில் அவசர மருத்துவ தேவை களுக்கு எத்நேரமும் அவசர சிகிச்சை க்காக அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்பு வசதிகள் பொருந்திய, 24 மணிநேரமும் இயங்கும், அவசர சிகிச்சை பிரிவை புதிய விரிவாக்கத்துடன் துவக்கியுள்ளது. இதன் தொடக்க விழா இன்று (4-ந் தேதி) நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவம் மற் றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் துவக்கி வைத்தார்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாந கராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் குப்புசாமி நாயுடு அறக் கட்டளை, அறங்காவலர், துணைத் தலைவர் கோபி நாத், ஜி.கே.என்.எம் மருத்து வமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி, மற்றும் மருத்துவர்கள் பங்கேற்றனர். விழா வில் அமைச்சர் மா.சுப் பிரமணியன் பேசியதாவது:-

மருத்துவ துறையில் ஜி.கே.என். எம். என் றாலே தமிழ்நாட்டின் அடை யாளம் என கூறலாம். தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவ துறை சிறந்து விளங்குகிறது. 36 மருத்துவ திட்டங்களை அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத் தில் மட்டும் ஒரு கோடியே 95 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். மேற்கண்டவாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img