fbpx
Homeபிற செய்திகள்பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

பருவ மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சிதம்பரம் பகுதியில் மேற்கொள் ளப்பட்டுள்ள முன்னேற்பாடு களை வேளாண், உழவர் நலத்துறை அமைச் சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செவ்வாய்க் கிழமை ஆய்வு மேற் கொண்டார்.

சிதம்பரம், கொள்ளிடம் வடிநில கோட்ட நீர்வளத்துறை உட்பட்ட பாசிமுத்தான் ஓடை, தில்லை அம்மன் ஓடை முத்தையா நாரில் உள்ள கான்ஷிப் வாய்க்கால், மணலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர் பொருள்வாணிபக்கழக செயல்முறை கிடங்கில் அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொது விநியோக பொருள்கள் இருப்பு குறித்து அமைச்சர் ஆய்வு செய்து, உணவுப் பொருள்களை மழைக்காலங்களில் பாதுகாப்பாக வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தினார். ஆய்வின்போது, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பொது விநியோகத் திட்ட இயக்குநருமான த.மோகன், மாவட்ட ஆட்சியர் சிபி. ஆதித்யா செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.சரண்யா. சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, கொள்ளிடம் வடிநில கோட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற் பொறியாளர் கொளஞ்சிநாதன், உதவி பொறியாளர்கள் ரமேஷ், புகழேந்தி, பார்த்திபன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img