fbpx
Homeபிற செய்திகள்‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ் நீலகிரி மாவட்டத்தில்பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்

நீலகிரி மாவட்டம், உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று ‘மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 644 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடி மதிப்பில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா முன்னிலை வகித்தார். விழாவில், சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் தெரிவித்ததாவது :
‘தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் உட்பட அனைத்துத்தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து, அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த சிறப்பு வாய்ந்த திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ், தமிழ்நாட்டில் மாதந்தோறும் 1.15 கோடி மகளிர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000- மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், மகளிர்களுக்கு இலவச பேருந்து சேவையின் மூலம் இதுவரை 445 கோடி மகளிர்கள் பேருந்து பயணம் செய்துள்ளார்கள். அதனடிப்படையில், நமது மாவட்டத்திலும் மக ளிர்க்கான இலவச பேருந்துகளில் ஏராளமான மகளிர்கள் பயணம் செய்து பயன்பெற்று வருகிறார்கள். மேலும், 118 பேருந்துகளில் மகளிர் பேருந்துகளாக இயக்கப் படும் பட்சத்தில் ஏறக்குறைய 75,000 பெண் பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் பள்ளி செல்லும் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களின் உடல்நலனை கருத்திற்கொண்டு, வரலாற்று சிறப்பு மிக்க திட்டமான ‘காலை உணவுத்திட்டம்” மூலம் 16 இலட்சம் குழந்தைகள் பயன் பெற்று வருகிறார். தமிழ்நாடு முதலமைச்சர் பெண்கள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் ‘புதுமைப் பெண்” திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்று உயர்கல்வி செல்லும் மாணவி யர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.1,000- வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் உயர் கல்வியில் சேரும் பெண்களின் சதவீதம் 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் பெண்கள் உயர்கல்வி பயில்வதை அரசு உறுதி செய்துள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் 9 சதவீதமும், ஜி.டி.பியில் 2 வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. அதேபோல் இந்தியாவின் வளர்ச்சி 7.24 சதவீதம் என்றால், தமிழகத்தின் வளர்ச்சி 8.19 சதவீதமாக உள்ளது. குறிப்பாக, மின்னணு பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது பெருமைக்குரிய விசயமாகும். தொழில் முதலீட்டாளர் விருப்ப பட்டியலில் முதலிடத்திலும், கல்வியில் இரண்டாவது இடத்திலும், புத்தாக்க திட்டத்தில் 9வது இடத்திலும், சுற்றுலா பயணிகள் வருகையில் 2வது இடத்திலும் தமிழ்நாடு உள்ளது. மேலும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரிடையாக தமிழ்நாடு முதலமைச்சர் பார்வைக்கு வழங்கும் வகையில் ‘முதல்வரின் முகவரி” என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கென பொறுப்பு அலுவலராக அரசு செயலாளரை நியமித்து, அதன் மூலம்; பொதுமக்களின் பல் வேறு கோரிக்கைகள் நிவர்த்தி செய்யப் பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின்கீழ், ஏற்கனவே பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, சம்மந்த்தப்பட்ட துறை அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்து, இன்றைய தினம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 18.12.2023 அன்று நமது மாவட்டத்தில் தொடங்கப்பட்ட மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், 29 சிறப்பு முகாம்கள் அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக ளில் நடத்தப்பட்டது. இதில் மக்களுடன் முதல்வர் திட்டத் தின்கீழ், 1,932 மனுக்கள் பெறப்பட்டதில், 1,101 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதற்கட்டமாக இன்று நடைபெற்று வரும் இவ்விழாவின் வாயி லாக, 644 பயனாளிகளுக்கு ரூ.5.50 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, உதகை வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீணா தேவி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சசிக்குமார் சக்கரபாணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முக சிவா, தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) தமிழ்மணி, உதகை நகரமன்ற துணைத்தலைவர் ரவிக்குமார், உதகை ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன் (எ) மாதன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img