கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், நகர்மன்றத்தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சித் தலைவர் சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் உலகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரியம் உறுப்பினர் புஷ்பராஜ் உட்பட பலர் உள்ளனர்.