fbpx
Homeபிற செய்திகள்ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களுக்காக இருசக்கர அவசர கால ஊர்தி அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் அறிமுகம்

ஜமுனாமரத்தூரில் மலைவாழ் மக்களுக்காக இருசக்கர அவசர கால ஊர்தி அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் அறிமுகம்

பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஜமுனாமரத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலைவாழ் மக்களுக்காக இருசக்கர அவசர கால ஊர்தியினை கொடியசைத்து பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், குழும இயக்குநர், தேசிய நலவாழ்வு குழுமம் – திட்ட இயக்குநர், தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டம் அருண்தம்புராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.என்.அண்ணாதுரை (திருவண் ணாமலை), எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம் பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சர வணன் (கலசப்பாக்கம்), ஒ.ஜோதி (செய்யாறு),மாநில உள்ளாட்சி பிரதி நிதிகள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img