கடலூரில் 101 அரங்கு களுடன் அமைக்கப்பட்ட 3-வது புத்தக திருவிழாவை அமைச்சர்கள் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன் தொடங்கி வைத்தனர்.
கடலூர் மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் 101 அரங்குகளுடன் 3-வது புத்தக திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார். விஷ்ணுபிரசாத் எம்.பி., எம். எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா. ராஜேந்திரன்,மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாம ரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசே கரன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்ப £ளர்களாக அமைச் சர்கள் எம்.ஆர். கே.பன்னீர் செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள், குழந்தைகள் மகிழும் வகையில் பொழுது போக்கு அம்சங்கள், பாரம்பரிய உணவு அரங்கம், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோளரங்கம், முப்பரிமான காட்சியரங்கம், வி.ஆர்.அரங்கம்,புத்தக வாசிப்புக் கூடம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
பின்னர் அமைச்சர்கள் பேசுகையில், கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதன் மூலம்,நம்வாழ்வில் ஏற்படுகிற இக்கட்டான சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண் டிய திறமைகளும் நம்மில் வளரும். வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். இந்த புத்தக திருவிழாவை மாணவ-மாணவிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். புத்தகத்தில் உள்ள கருத்துகள் காலத்தால் அழிக்க முடியாதது. ஒருபுத்தகத்தில் இடம் பெறும் அறிய தகவல்கள் இன்றைய தலைமுறையினர் மட்டு மல்லாமல் வருகிற தலைமுறை யினரும் அறிந்து கொள்ள முடியும். ஆகவே புத்தகத்தில் இடம்பெறும் அனைத்து தகவல்களும் இன்றைய செய்தி,நாளைய வரலாறு ஆகும், என்றனர்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர அனு உள்பட பலர் கலந்து கொண்டனர்.