fbpx
Homeபிற செய்திகள்மிவியின் புதிய ஹியர் கிளியர் விளம்பரம்

மிவியின் புதிய ஹியர் கிளியர் விளம்பரம்

மிவி, ஆடியோ சாதனத் துறையில் முதல் முறையாக தனது புதிய “ஹியர் கிளியர்” என்னும் சத்தமில்லா விளம்பரம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம், “நரியைப் போல் தெளிவாகக் கேளுங்கள்” என்பதை அது விளம்பரப்படுத்துகிறது.

இந்த விளம்பரம் பார்வையாளர்களை ஒரு விசித்திரமான காட்டிற்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒரு இளம் சாகசக்காரர் சத்தமின்றி நடனமாடும் நரிகளை பார்த்து ஆச்சரியத்தில் அப்படியே நிற்கிறார்.

அதில் ஒரு நரி அவருக்கு சூப்பர்பாட்ஸ் இம்மர்சியோ டிடபிள்யூஎஸ் இயர்பட்களை பரிசாக வழங்குகிறது. அதை காதில் வைத்தபோது அதன் தெளிவான சத்தத்தை கேட்ட அவரும் மகிழ்ச்சியாக அந்த நரிகளுடன் சேர்ந்து நடனமாடுகிறார். இவ்வாறு அந்த விளம்பரம் எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மிவி நிறுவனத்தின் இணை நிறுவனர் மிதுலா தேவபக்துனி கூறுகையில், “சூப்பர்பாட்ஸ் இம்மர்சியோ இயர்பட்கள் இப்போது எங்களின் அதிகாரப்பூர்வ இணையதளம், முன்னணி சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் உள்ளிட்ட ஆன்லைனிலும் கிடைக்கின்றன” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img