பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வேட்டி-சேலை வழங்குவதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு,ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட உள்ள விலையில்லா வேட்டி சேலைகள்.சிதம்பரம் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் நேற்று மாவட்ட கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் பார்வை யிட்டு,ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் அரிசி,பருப்பு மற்றும் பாமாயில் இருப்பு குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் கூறுகையில், கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டும் வேலை வாய்ப் பினை உருவாக்கிடும் வகையிலும்,பொங்கல் திருநாளை அனைவரும் புத்தாடை அணிந்து சிறப்பாக கொண்டாடும் பொருட்டும் வேட்டி & சேலைகள் வழங்கப் பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், கடலூர் மாவட்டம்,புவனகிரி தாலுகா பகுதியில் 50,933 வேட்டி-சேலைகளும், சிதம்பரத்தில் 66,157 வேட்டிகளும், 66,641சேலைகளும், கடலூரில் 1,01,412 வேட்டிகளும், 1,02,153 சேலைகளும், காட்டுமன் னார்கோவிலில் 46,526 வேட்டி-சேலைகளும், குறிஞ் சிப்பாடியில் 67,973 வேட்டி- சேலைகளும், பண்ருட்டியில் 1,01,921 வேட்டிகளும், 102,161 சேலைகளும், ஸ்ரீமுஷ்ணத்தில் 28,344 வேட்டிகளும், 28,380 சேலைகளும், திட்டக்குடியில் 59,107 வேட்டிகளும், 59,178 சேலைகளும், வேப்பூரில் 29,211 வேட்டிகளும், 29,318 சேலைகளும், விருத்தாசலத் தில் 88,624 வேட்டிகளும், 87,608 சேலைகளும் என மொத்தம் 6 லட்சத்து 40 ஆயிரத்து 208 விலையில்லா வேட்டிகளும், 6 லட்சத்து 40 ஆயிரத்து 871 விலையில்லா சேலைகளும் ரேஷன் கார்டு தாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதுதவிர அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் விலை யில்லா வேட்டி,சேலை சென்றடைவதை கண்கா ணிக்கும் வகையில் கண்கா ணிப்பு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன, என்றார்.
ஆய்வின்போது, பயிற்சி ஆட்சியர் ஆகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜீ உள்பட பலர் உடனிருந்தனர்.