தர்மபுரி நகரில் ரூ.76 லட்சம் மதிப்புள்ள திட்ட பணிகளை மேற்கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தர்மபுரி நகராட்சி கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா கூட்ட அரங் கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார்.
தர்மபுரி நகராட்சி பகுதியில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்தும், தர்மபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி, வி. ஜெட்டி அள்ளி, தடங்கம், சோகத்தூர் ஆகிய ஊராட்சிகளை இணைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் நகராட்சி ஆணையாளர் சேகர் விளக்கிப் பேசினார்.
வருவாய் ஆய்வாளர் மாதையன் கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து பேசினார். தர்மபுரி நகரில் உள்ள அனைத்து கழிவு நீர் கால்வாய்களையும் தூர்வார வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். பின்னர் ஆணையாளர் சேகர் பதில் அளித்து பேசுகையில்,
“தர்மபுரி நகரில் உள்ள அனைத்து சாக்கடை கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நகரில் அனைத்து வாடு களிலும் சுழற்சி முறையில் கொசு மருந்து அடிக்கப்படும் என்று கூறினார்.
தர்மபுரி நகரில் குடிநீர் பணிகள், சாலை பணிகள், சாக்கடை வசதி, கான்கிரீட் சாலை அமைப்பது என்பது உள்ளிட்ட மொத் தம் 42 பொருட்கள் கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் ரூ. 18 லட்சம் மதிப்பீட்டில் லிப்ட் அமைப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் ரூ.76 லட்சம் மதிப்பில் மேற் கொள்ள நகராட்சி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் புவனேஸ்வரி, உதவி பொறியாளர் அறிவழகன், சுகாதார அலுவலர் ராஜரத்தினம், நகர் நல அலுவலர் லட்சியவர்னா, நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன், நகரமைப்பு ஆய்வாளர் ஜெயவர்மன், துப்புரவு ஆய்வாளர்கள் சுசீந் திரன், ரமணசரன் மற்றும் நகராட்சி அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார் நன்றி கூறினார்.