fbpx
Homeபிற செய்திகள்எம்.வி. டயாபடீஸ் மருத்துவமனையில் பாத மருத்துவத்திற்கான பள்ளி துவக்கம்

எம்.வி. டயாபடீஸ் மருத்துவமனையில் பாத மருத்துவத்திற்கான பள்ளி துவக்கம்

எம்.வி. டயாபடீஸ் ராயபுரம் மற்றும் யுஎஸ்ஏவை சேர்ந்த ஏபிடபிள்யுஎச் என்ற அமைப்பு இணைந்து டயாபெட்டிக், ஃபுட் ரீசர்ச் இந்தியா (DFRI) என்ற பெயரின் கீழ் இந்தியாவில் முதன் முறையாக பாத மருத்துவத்திற்கான பள்ளியை தொடங்கு கின்றன.

எம்.வி. டயாபடீஸ் ராயபுரம் வளாகத்தில் அமைகின்ற இந்த பாத மருத்துவத்திற்கான பள்ளி, எம்.வி. டயா படீஸ் ராயபுரம் மருத்து வமனையில் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்ற நீரிழிவு பாத சிகிச்சை தொடர்பான அனைத்து பணிகள் மற்றும் நக பராமரிப்பு போன்ற பாத மருத்துவத்தின் அடிப்படை அம்சங்களில் மருத்துவர்களுக்கும் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்களுக்கும் பயிற்சியளிக்கும்.

இது தொடர்பாக எம்.வி. டயாபடீஸின் தலைமை மருத்துவர் டாக்டர். விஜய் விஸ்வநாதன் பேசுகையில், “நீரிழிவுடன் வாழ்கின்ற நபர்களது பாதங்களை எப்படி கவனமாகப் பராம ரித்து பேண வேண்டும் என்பது மீது இப்பள்ளியின் முக்கிய கூர்நோக்கம்“ என்றார்.

எம்.வி. டயாபடீஸ் ராயபுரம் மருத்துவமனை வளாகத்தில், அக்டோபர் 23 முதல் 25-ம் தேதி வரை நடைபெறுகின்ற இந்த கல்வி மற்றும் பயிற்சிக்கான முதல் செயல்திட்டத்தில் ஆசிரியராக பங்கேற்கும் பாத மருத்துவத்திற்கான நியூயார்க் கல்லூரியின் துணை பேராசிரியர் டாக்டர். ஆண்டனி ஐரியோயின் படி நீரிழிவு சிகிச்சை மற்றும் நீரிழிவு பாத பராமரிப்பு ஆகிய அம்சங்கள் குறித்த கல்வி வழங்கப்படும்.

படிக்க வேண்டும்

spot_img