fbpx
Homeபிற செய்திகள்நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலோசனை கூட்டம்

கரூர் ஜவஹர் பஜார் பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில், நாம் தமிழர் கட்சி சார்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் நடைபெற்றது. நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கரூர் பாராளுமன்ற தொகுதி சார்பாக மருத்துவர் கருப்பையா வேட்பாளராக களம் இறங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட தலைவர் மைக்கேல், மாவட்ட பொருளாளர் துரைராஜ் உள்ளிட்ட கரூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு, தேர்தலின் போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, அவரவர் கருத்துக்களை பதிவு செய்தனர். கூட்டத்தின் இறுதியில் வழக்கறிஞர் இளமாறன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img