தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், பாகலஅள்ளி ஊராட்சி, வேட்டைகவுண்டன் குட்டையில் ரூபாய் 6.17 லட்சம் மதிப்பீட்டில் குளம் அமைத்தல் மற்றும் அதே ஊராட்சியில், சவுளூர் கிராமத்தில் ரூபாய் 14.70 லட்சம் மதிப்பீட்டில் தானிய களம் அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கு பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் முருகன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ரம்யாகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் த.காமராஜ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் – சுப்ரமணி, தமிழ்செல்வி, வேலு, வேலுசாமி, சிவகாமி, தேவகி, அப்பு, சமூக ஆர்வலர்கள் – சிவபிரகாசம், தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.