ஜி.கே.என்.எம் மருத்துவமனை மாற்று மருத்துவத் துறையின் மூலம் ‘நம் நலம்‘ என்ற ஒரு விரிவான ஆரோக்கிய முயற்சியை அறிமுகப்படுத்தியது.
இந்த முயற்சி ஆயுர் வேதம், வர்மம், யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் குத்தூசி மருத் துவம் ஆகிய சிறப்பு கிளினிக்குகள் மூலம் முழுமையான மற்றும் இயற்கையான சிகிச்சை முறைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நம் நலம் ஒற்றைத் தலைவலி, வலி மேலாண் மை மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்ற பொதுவான சுகாதார பிரச்சினைகளை கையாள்வதில் கவனம் செலுத்தும். மேலும் வழக்கமான மருத்துவ சிகிச்சைகளுக்கு புதுவிதமான அணுகுமுறையை நோயாளிகளுக்கு வழங்கும்.
இந்த முயற்சி தனிப் பயனாக்கப்பட்ட கவனிப்பு மற்றும் பாரம்பரிய சிகிச்சை முறைகளை நவீன சுகாதார புரிதலுடன் ஒருங்கிணைப்பதை வலி யுறுத்துகிறது.
நம் நலம்‘ முயற்சியை ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். ரகுபதி வேலுசாமி அதி காரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த துவக்க விழாவில் பேசிய டாக்டர் வேலுசாமி, ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் விரிவான நோயாளி கவனிப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு மாற்று மருத்துவத்தை ஒருங்கிணைப்பதன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.