fbpx
Homeபிற செய்திகள்நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உழவர் பெருவிழா - வேளாண்மைக் கண்காட்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உழவர் பெருவிழா – வேளாண்மைக் கண்காட்சி

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பருத்திக்கான சிறப்பு முன்னோடித் திட்டத்தி ன்கீழ், உழவர் பெருவிழா மற்றும் வேளாண்மைக் கண்காட்சி நடைபெற்றது.
மத்திய- மாநில அரசு துறைகள், விவசாய பெரு மக்களுக்கு, பல்வேறு வேளாண்மைத் தொழில் நுட்பங்களை வழங்கி, விளைபொருட்களின் உற்பத்தியை பெருக்குவ தற்கான திட்டங்களை வெற்றிகரமாக செயல்ப டுத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், நாக்பூர்-மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் ஆகியவை இணைந்து நடத்திய, பருத்திக்கான முன்னோடித் திட்டம் , அடர் நடவு பருத்தி சாகுபடி உழவர் பெருவிழா- வேளாண்மைக் கண்காட்சி நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துணை இயக்குனர் கோவிந்தசாமி பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.

கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் முனைவர். செல்வராஜூ, கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டார். மேலும், அடர் நடவு முறையில் பருத்தி சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த கையேட்டையும் அவர் வெளியிட்டார்.

வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் வழங்கும் பருத்தி சாகுபடி அறிவியல் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, பருத்தியில் இலாபத்தை அடைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பருத்தி சாகுபடி விவசாயிகளுக் கான உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முன்னதாக, பருத்தி சாகுபடி, ட்ரோன் தொழில்நுட்பம், சொட்டு நீர்ப் பாசனம், அரசுகள் வழங்கும் மானிய உதவிகள், கால்நடை பராமரிப்பு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் 15 அரங்குகளில் வேளாண் கண்காட்சி அமைக்கப்பட்டதை, ஏராளமான விவசாயிகள் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கில் பருத்திக்கான முன்னோடி திட்டம் செயல்பாடுகள், பருத்தியில் அடர் நடவு சாகுபடி தொழில்நுட்பம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, மண் பரிசோதனை, பருத்தி இரகங்களின் சிறப்புகள், நானோ உரங்களின் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து தொழில்நுட்ப உரைகள் வழங்கப்பட்டன.


நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் வேல் முருகன் பேசுகையில், அதிக மகசூல் தரும் அடர் நடவு முறையில் பருத் தியை ஒரு விவசாயி 1 முதல் 5 ஏக்கர் வரை சாகுபடி செய்யலாம்.

இம்மாவட்டத்தில் 200 ஏக்கரில் அடர் நடவு பருத்தி சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img