நாமக்கல் மாநகராட்சியில் பெண் தூய்மைப் பணியாளர்களை ஆணையர் ரா.மகேஸ்வரி கௌரவித்து பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு, மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி தலைமை வகித்தார். செயற்பொறியாளர் சண்முகம், சுகாதார அலுவலர் திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மகளிர் தினத்தை முன்னிட்டு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து செய்தியை பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறப்பாக பணியாற்றிய 10 பெண் தூய்மைப்பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி மாநகராட்சி ஆணையர் ரா.மகேஸ்வரி பாராட்டினார். முன்னதாக நகர் மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கேக் வெட்டி, மகளிர் தின விழா வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.