நாமக்கல் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், நாமக்கல் எலைட் அரிமா சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய அரிமா.டாக்டர். கே.காளியப்பன் நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் (மார்ச் 30) ஞாயிற்றுக்கிழமை நாமக்கல்- திருச்சி சாலையில் உள்ள கவிஞர் இராமலிங்கம் மகளிர் கல்லூரியில் காலை 8 மணி முதல் மதியம் இரண்டு மணி வரை நடைபெற்றது.
நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் மா.கோவிந்தராசு மற்றும் அரிமா சங்க நிர்வாகிகள் திருஞானசம்பந்தன்,சிவசண்முகம், தினேஷ், நடராஜன்,மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளும் இலவசமாக பரிசோதிக்கப்பட்டது.
இம்முகாமில், 500க்கும் மேற்பட்டோருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பேருந்து மூலம் அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி யூத் ரெட் கிராஸ் மாணவிகள் மற்றும் பேராசிரியைகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து அவர்களுக்கு டோக்கன் வழங்கி உதவி செய்தனர்.