fbpx
Homeபிற செய்திகள்உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு 9,000 மரக்கன்றுகள் நட்டு ஊராட்சிகளிடம் ஒப்படைத்த நாமக்கல் எம்பி...

உலக தண்ணீர் தின விழாவை முன்னிட்டு 9,000 மரக்கன்றுகள் நட்டு ஊராட்சிகளிடம் ஒப்படைத்த நாமக்கல் எம்பி மாதேஸ்வரன்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதி, மோகனூர் ஒன்றியம், ஆண்டாபுரம் ஊராட்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சமூக பொறுப்பு திட்டம் மூலம் 9,000 மரக்கன்றுகள் நட்டு ஊராட்சிகளிடம் ஒப்படைப்பு விழா மற்றும் ஆண்டாபுரம், சின்னப்பத்தம்பட்டி பஞ்சாயத்துகளுக்கு மின்கல வண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ்.மாதேஸ்வரன் சிறப்பு விருந்தினராக கலந்து மரங்கள் நடுதலை தொடங்கி வைத்து பராமரிப்புக்காக ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார். அதேபோல மின்கல வண்டிகளையும் ஊராட்சிகளுக்கு வழங்கி சிறப்புரை ஆற்றினார்

இந்த நிகழ்வில் ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் ராஜேஸ்வரி, நவராஜா, சதீஷ்குமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன், நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், மாவட்ட தலைமை நிலைய செயலாளர் செல்வராஜ், மோகனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவகுமார், கிளை பொறுப்பாளர் முருகேசன், குமாரசாமி, சரவணன், சதீஷ், வெற்றி வேல், பொதுமக்கள் உள்ளி ட்ட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img