இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு சேலத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் சர்க்கரை நோய் தலைமை மருத்துவர் பாலமுருகனுக்கு இந்திய மருத்துவ சங்கத்திற்கு சேவையாற்றியதற்கான விருது வழங்கப்பட்டது.
இவ்விருதை இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழக தலைவர் டாக்டர். அப்துல் ஹாசன் வழங்கினார். இந்நிகழ்வின், போது இந்த ஆண்டுக்கான இந்திய மருத்துவ சங்க மாநில புதிய தலைவர் டாக்டர் செங் குட்டுவன் மற்றும் தமிழ்நாடு கிளை இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1000 மருத்துவர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் கோவை நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் பாலமுருகன் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் உள்ள சர்க்கரை நோயை திரும்ப குண மாக்க முடியுமா என்ற தலைப்பில் டயாபடிக் ரிவர்சல் என்ற ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார். மேலும் டாக்டர் பாலமுருகன் கோவை இந்திய மருத்துவ சங்கத்தின் இணைச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.