2025ம் ஆண்டிற்கான தேசிய தூய்மை தினம் ஜனவரி 30ம் தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான வாழ்விட பராமரிப்பு துறையில் முதன்மை வகிக்கும் அதுல்யா சீனியர் கேர் சமூக பணியை முன்னெடுத்துள்ளது.
அதன் முயற்சியான “கேரிங் பார் எ சீனியர்” என்பதன் கீழ், சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் கடற்கரையை தூய்மையாக்கும் நிகழ்வை நடத்தியது.
அர்பேசர் சுமித் மற்றும் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் ஒர்க் ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்போடு தூய்மை பணி நடைபெற்றது.
இந்நிகழ்வில் 200-க்கும் அதிகமான தன்னார் வலர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். இவர்கள் கடற்கரையை தூய்மையாக்கினர்.
இதில் அதுல்யாவின் நிறுவனர் ஸ்ரீனிவாசன் கூறுகையில், “முதியவர்களுக்கு மரியாதை மற்றும் கனிவான அக்கறை என்ற கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உணர்வையும் நாங்கள் முன்னிலைப்படுத்தி ஊக்குவிக்கிறோம்“ என்றார்
நேர்மறை மாற்றத்தையும், தூய்மையான, பசுமையான மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய சமூக ஒருங்கிணைப்பையும் முன்னெடுக்கும் நிகழ்வாக இது இருந்தது எனவும் தெரிவித்தனர்.