fbpx
Homeபிற செய்திகள்சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் கஸ்தூரி பருத்திக்கு புத்துயிர் அளிக்கும்...

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் கஸ்தூரி பருத்திக்கு புத்துயிர் அளிக்கும் தேசிய மாநாடு

கோவை, சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் உலக பருத்தி தினத்தை முன்னிட்டு இந்திய கஸ்தூரி பருத்தியின் மறு மலர்ச்சி என்ற தலைப்பில் தேசிய மாநாட்டை நடத்தியது.

SVPIST-யின் இயக்குநரும், மாநாட்டின் புரவலருமான டாக்டர். பி. அல்லி ராணி, கஸ்தூரி பருத்தி மேம்படுத்தப்பட்டால் இந்தியாவின் ஜவுளித் தொழில் முன்னேற்றம் காணும் என்றார்.

தென்னிந்திய மில்ஸ் அசோசியேஷன் (சிமா) பொதுச் செயலாளர் டாக்டர். கே. செல்வராஜு தலைமையில் குழு விவாதம் தொடங்கியது.

குழுவின் மற்ற உறுப்பினர்கள் மனோகர் சம்பந்தம் (GRoboMac இன் நிறுவனர்), எஸ். வெங்கடகிருஷ்ணன் (பருத்தி இழை நிபுணர் மற்றும் தொழில்நுட்பவியலாளர்), அசோக் டாம்ஜி தாகா (நிறுவனர், டாம்ஜி வேல்ஜி – கோ., கோயம்புத்தூர் பருத்தி சங்கத்தின் முன்னாள் தலைவர்), சேத்தன் எச் ஜோஷி (ஐசிஎஃப் இயக்குனர்), மற்றும் அமிர்தராஜ் தெட்டரவு குமார் (துணைத் தலைவர், டிஜிட்டல் சொல்யூஷன்ஸ், டெக்ஸ் காம்ஸ் சொலுஷன்ஸ்) ஆவர்.

கஸ்தூரி பருத்தியை ஒரு வியாபார குறியாக பயிரிட்டு பிரபலப்படுத் துவதில் உள்ள சவால்களை குழு உறுப்பினர்கள் பட்டியலிட்டனர். தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img