fbpx
Homeபிற செய்திகள்4வது தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டி

4வது தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டி

மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறை, ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஸ்டிடி யூட் ஆப் டெக்னாலஜி, அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் இணைந்து 4வது தேசிய அளவிலான எலக்ட்ரிக் பைக் வடிவமைப்பு போட்டிகளை நடத்தியது.

இதன் தொடக்க விழாவில் எஸ் என் ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் மற்றும் என்.ஆர். அலமேலு ஆகியோர் தலைமை வகித்தனர்.
இந்தியா முழுவதிலுமிருந்து 13 ஆர்வமுள்ள அணிகள் பங்கேற்றன.

முதல் நாளில், அணிகள் தொழில்நுட்ப ஆய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில், கோவை தெற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவதன் முக் கியத்துவத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.

2வது நாளில் வடிவ மைப்பு விளக்கக்காட்சி மற்றும் வணிகத் திட்ட விளக்கக்காட்சி உள்ளிட்ட நிலையான நிகழ்வுகள் இடம் பெற்றன.

3வது நாளில் டைனமிக் நிகழ்வுகள் நடந்தன. பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அணிகள் பந்தயத் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இதில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை குண்டூரில் உள்ள RVR ​​- JC பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த பால்கன் ரேசர்ஸ் வென்றர். ஜோசப் பொறியியல் கல்லூரியின் மகளிர் அணி, சிறந்த பெண் ஓட்டுநர் விருதை பெற்றார்.

படிக்க வேண்டும்

spot_img