fbpx
Homeபிற செய்திகள்கோவையில் நடைபெற்ற ஊட்டச்சத்து தேசிய மாநாடு

கோவையில் நடைபெற்ற ஊட்டச்சத்து தேசிய மாநாடு

பூசா கோ.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மன்றத்தின் ஆதரவுடன் எதிர்காலத்தில் மனித உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய மாநாடு டிச.12 மற்றும் 13 தேதிகளில் கோயம்புத்தூர் வளாகத்தில் நடைபெற்றது.

இம்மாநாடு, ப்ரோபயாட்டிக்ஸ், பிரீபயாட்டிக்ஸ் மற்றும் போஸ்ட்பயாட்டிக்ஸின் புதிய வளர்ச்சிகளை முன்வைத்து, குடலின் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மேம்பாடு மற்றும் நீண்டகால நோய் தடுப்பு போன்ற துறைகளில் அவற்றின் பங்களிப்புகளை ஆராய்ந்தது. 

மாநாட்டை கல்லூரி தலைவர் முனைவர் ஆர். நந்தினி தொடங்கி வைத்தார். செயலாளர் முனைவர் என்.யசோதா தேவி நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கினார். முதல்வர் முனைவர் பி.பி. ஹரதி  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

இம்மாநாட்டில் டாக்டர் பிரகாஷ் குமார் சாரங்கி – மைய வேளாண் பல்கலைக்கழகம், மணிப்பூர்டாக்டர் எஸ். பாலமுருகன் DBT ராமலிங்கசுவாமி தேர்வாளர்-SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,

டாக்டர் அவினாஷ் சிங்கோடே-மூத்த விஞ்ஞானி, டாக்டர் ஆர். சதீஷ்குமார் தலைவர் உயிரித் தொழில்நுட்பத் துறை, பாரதியார் பல்கலைக்கழகம் என பலர் கலந்து கொண்டனர்.

இம்மாநாடு முனைவர் ஆர். நிர்மல் குமார் (தலைமை ஒருங்கிணைப்பாளர்),  ஆர். கிருபா, முனைவர் வி. புவனேஸ்வரி, மற்றும் முனைவர் சுபா தாமோதரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில்  நடத்தப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img