fbpx
Homeபிற செய்திகள்அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் நிறைவு விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் தேசிய ஊட்டச்சத்து மாதம் நிறைவு விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை, ஊட்டச்சத்து கழகம், இந்திய ஊட்டச்சத்து சங்கம், கோயம்புத்தூர் பிரிவு மற்றும் டாக்டர்.ராஜம்மாள் பா தேவதாஸ் இருக்கை குழுவுடன் இணைந்து ஒவ்வொருவருக்கும் சத்தான உணவு என்ற மையக்கருத்தில் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் வெவ் வேறு நிகழ்வுகளால் கொண்டாடப்பட்ட தேசிய ஊட்டச்சத்து மாதம் நிறைவு விழா செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்றது.

இதில், துணைவேந்தர் வி.பாரதி ஹரிசங்கர், தலைமையுரை வழங்கி, படைப்பிற்குத் தயாராகும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்திற்கான நிலையான அணுகுமுறைகள் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்த, மனையியல் புல முதன்மையர் முனைவர் எஸ்.அம்சமணி வாழ்த்தி பேசினார்.

தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் அறிவியலாளர் டாக்டர். சுப்பா ராவ்.எம்.கவரவரவு ஒவ்வொருவருக்கும் ஊட்டச்சத்தான உணவு பற்றிய சிறப்புரை வழங்கினார்.

விழா ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். சி.எ.கல்பனா, மனையியல் இணை புலமுதன்மையர், உணவு ஊட்டச்சத்து துறை தலைவர், உதவி பேராசிரியர் முனைவர் க.தேவி மற்றும் விழா நடத்துனர்கள் இரண்டாம் ஆண்டு உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலை மாணவிகள், ஒருமாத நிகழ்வுகளை காட்சிப்பட மாக்கி வழங்க, வெவ்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டனர்.

படிக்க வேண்டும்

spot_img