fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் இந்திய அறிவு அமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கு

நிர்மலா கல்லூரியில் இந்திய அறிவு அமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கு

நிர்மலா கல்லூரி கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கிரவுன் மற்றும் பாரதிய நாட்டு வைத்திய மகா பாடசாலா ஆகியவற்றுடன் இணைந்து மார்னிங் ஸ்டார் ஆடிட்டோரியத்தில் இந்திய அறிவு அமைப்பு குறித்த தேசிய கருத்தரங்கை நடத் தியது. இதில் பாரம்பரிய வைத்தியர் களை கவுரவித்தல் மற்றும் மாணவர்களுக்கு இலவச வர்மம் மற்றும் சித்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதில், தலைமையாசிரியர் மேரி ஃபேபியோலா, துணை முதல்வர் டாக்டர் எமெல்டா மேரி மற்றும் பல்வேறு கல்வி அமைப்புகள் விருந்தினர் பேச்சாளர்களை கவுரவித்தனர்.
தொடர்ந்து டாக்டர் அருணா தேவராஜ் ராஜேந்திரன், நிர்மலா மகளிர் கல்லூரி கோவை கன்வீனர் ஆகியோர் வளவாளராகப் பணி யாற்றி பாரம்பரியம் குறித்து சிறப்புரையாற்றினர்.

தொடர்ந்து, ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கிரவுன், அருள் ஹெல்த் கேர், சென்னையின் செயலாளர் அருள் ஆனந்தகுமார், வர்மா ஆசான் டாக்டர். பசீர் அகமது உள்ளிட்டோரும் பேசினர்.
இந்நிகழ்வில், தமிழ்நாட்டின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நட னங்கள் நடைபெற்றது. இதில் 2300 பங்கேற்பாளர்கள் பயனடைந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img