fbpx
Homeபிற செய்திகள்தேசிய சிலம்ப போட்டியில் பதக்கங்கள் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

தேசிய சிலம்ப போட்டியில் பதக்கங்கள் குவித்த கோவை மாணவ, மாணவிகள்

அகில இந்திய சிலம்ப சம்மேளனம் நடத்தும் 21வது தேசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் 2024&2025 போட்டி அக்டோபர் 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 350க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

இதில் தமிழக அணி சார்பாக கோவை மாவட்ட இம்மார்ட்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சி பள்ளி 16 மாணவ மாணவிகள் கலந்து கொண்டு 11 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் ஆக மொத்தம் 28 பதக்கங்கள் வென்றனர்.

இந்த போட்டி 13 வகையான விளையாட்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் மினி சப் ஜூனியர், சப் ஜூனியர், சீனியர் பிரிவுகளில் நடைபெற்றது. இதில் நேகா ஸ்ரீ. ஹரிணி, தருண், சஷ் வந்த், ஹரீஸ், சரண், பிரனேஷ், சஞ்சித், நிதர்சனா, நேத்ரா ஸ்ரீ. ஸ்வாணிகா, சரித்ரா, ஜெயசிம்மன், ரூபேஷ், ராகுல் ஆகியோர் பதக்கங்கள் வென்றனர்.

வெற்றி பெற்ற வீரர் வீராங்கணைகள் அகில இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்ப சங்கம், கோவை மாவட்ட சிலம்ப விளையாட்டு சங்கம், சிலம்பாலயா அறக்கட்டளை தலைவர் டாக்டர்.றி.செல்வகுமார் அவர்கள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், இம்மார்ட்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்தினர்.

படிக்க வேண்டும்

spot_img