கோவை நிர்மலா மகளிர் கல்லூரி, தொழில் முனைவோர் அமைப்பு, IIC அமைப்பு, NISP அமைப்பு, அல்மைட்டி ஜெம்ஸ், உலகசாதனைக்குழு மற் றும் ஜெம்ஸ்டோன் பிரினியர் இணைந்து கடந்த 23, 24ம் தேதிகளில் நவரத்தினக் கற்கள் கண்காட்சியை நிர்மலா மகளிர் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.
முதல் நாள் நிகழ்வில் நிர்மலா மகளிர் கல்விக்குழுமத்தின் தலைவர் அருளன்னை பபி யோலா மேரி, மியான்மரின் கௌரவ தூதர் பேராசிரியர் ஜே.ரங்கநாதன், தான்சானியாவின் கௌரவ தூதர் டாக்டர் கிருஷ்ணா என்.பிம்பிள், பொது நிதி சேவையின் விற்பனைத் துறை பொது மேலாளர் எல்.ராஜலஷ்மி, மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார், சென்னை வேல்ஸ் ஃபிலிமின் நிர்வாக இயக்குநர் அஷ்வின் குமார் கமலக்கண்ணன், கதிர் நிறுவனத்தின் நிறுவனரும் தலைவருமான எஸ்.கதிர், கோவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் துணை பொது மேலாளர் எஸ்.ஹரிஹரன், லேகா புரொடக்ஷனின் நிறுவனர் லேகா ரத்னகுமார், விராமத் நிதி சேவையின் நிர்வாக இயக்குநர் பிஎல்.எம். பழனியப்பன், ஆர்பிஜி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் ராஜேந்திரன் பூபதி, திருச்செங்கோடு கேஎஸ்ஆர் குழும தலைமை நிர்வாகி ஆசைத்தம்பி, ஏஏஐபி நிறுவனத் தின் தலைமை நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான ரவிரகுபதி, ஜெம்ஸ் டோன் ஆபரண மதிப்பீட்டாளர் ஜோஸ் ஜார்ஜ், நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா, அல்மைட்டி ஜெம்ஸ், நிறுவனத்தின் இயக்குநர் எஸ்.சுந்தர் ஆகியோர் சிறப்பு விருந் தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்த உலக சாதனை கண்காட்சியில் 108 வகையான விலைமதிப்பற்ற நவரத்தினக் கற் கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அனைவரின் மனதையும் கவரும் வண்ணம் இருந்தன. நிர்மலா மகளிர் கல்லூரி மாணவியரால் செய்யப்பட்ட ஆபரணங்களும் இக்கண்காட்சியில் இடம்பெற்றன. 555 மதிப்புக் கூட்டப்பட்ட கைவினை பொருட்கள், நவ ரத்தினக் கற்களால் செய்யப்பட்ட ஆபரணங்கள் அனைவரின் பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்தன. இக் கண்காட்சி தொழில்முனைவோ ருக்கான நேரடி விற்பனைக்கு வித்திட்டது.
தொழில் நிபுணர்களையும் உலக நவரத்தினக் கற்கள் கண்டுபிடிப்பாளர்க்கும் இடையே யான இணைப்புப் பால மாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு வைக்கபட்டிருந்த ஆபரணப் பொருட்களின் விலை வேறெங்கும் வாங்க முடியாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது. இக்கண்காட்சியில் வைகப்பட்டிருந்த 555 நவரத்தி னக்கற்களையும் ஒரே இடத்தில் வைத்துக் காண்பதற்கு கோவை நிர்மலா மகளிர் கல்லூரி களம் அமைத்துக் கொடுத்து தனது மிகப்பெரிய பங்களிப்பைச் செய்தி ருந்தது மேலும் சிறப்பிற்குரியது.
இக்கண்காட்சியின் முத்தாய்ப்பாக 10.75 கிலோ எடையுள்ள மரகதக்கல் கலையரங்கத்தில் அனைவரின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. இவ்வாறாக அனைத்து நவரத்தினப் பொருட்களையும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ் வின் நிர்வாகியும் புளோரிடா மாகாணத்தைச் சார்ந்த கிறிஸ்டோபர் டெய்லர் நிர்மலா மகளிர் கல்லூரிக்கு உலகசாதனை விருது அளித்துச் சிறப்பித்தார். இவ்விருதை, கல்லூரியின் அருளன்னை பபியோலா மேரி, செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா ஆகியோர் பெற்று கொண்டனர்.
இறைவணக்கப்பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்விற்கு நிர்மலா மகளிர் கல்லூரியின் செய லர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரஸ் வரவேற்புரை நல்க, நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா அவர்கள் நன்றி யுரை வழங்கினார்.