போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை அரசு உடனே துவக்க வேண்டும் என்று எச்.எம்.ஸ் சாலை போக்குவரத்து பொதுச் செயலாளர் சுப்ரமணிய பிள்ளை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஈரோட்டில் எச்எம்எஸ் உழைப்பாளர் சங்க மாவட்ட தலைமை அலுவலகத்தை அவர் திருநகர் காலனியில் திறந்து வைத்தார். சங்க மாவட்ட செய லாளர் எஸ்.மனோகரன் தலைவர் எம். சந்திரகுமார் முன்னிலை வைகித்தனர்.
பின்னர் அவர் கூறிய தாவது: போக்குவரத்து தொழிலாளர்க ளுக்கு மூன்றாண்டு ஊதிய ஒப்பந்தம் திமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது.
கடந்த ஆகஸ்டிலேயே பழைய ஊதிய ஒப்பந்த முடிவடைந்தது. வரும் 27ஆம் தேதி சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறினார்கள்.
ஆனால் இதுவரை எந்த சங்கத்திற்கும் அழைப்பு வரவில்லை. கடந்த பொங்கலுக்கு முன்பு ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீதி மன்றம் தலையிட்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு அறிவுறுத்தியது. அப்போது அதி காரிகள் மட்டத்தில் தான் கண் துடைப்புக்காக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடந்தது.
இப்பொழுது அமைச்சர் தலையிட்டு பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்கள் கடும் பணிச்சுமையுடனும் பல்வேறு ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிந்து வருகின்றனர்.
அவர்களுக்கு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்சம் 20 சதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் இறந்த தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த அரசு 50% அளவிற்கு பிஎப் பணம் தருவதாக கூறியுள்ளது.
ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு மேலாக அவர்களுக்கு தரவேண்டிய ஓய்வு கால பலன்கள் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகால பலன்களை உடனே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சங்க நிர்வாகிகள் ராஜலட்சுமி ராஜ்குமார் ஜீவா சண்முகம் பி செந்தில்குமார் உடன் இருந்தனர்.