ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா மாவட்டம் தல்டாங்கல் பகுதியில் புதிய தேவாலயம் திறந்து வைக்கப்பட்டது. “யூத் மிஷனரி மூவ்மென்ட்” என்ற அமைப்பின் சார்பில் இந்த “பிரார்த்தனா பவன்” (Prarthana Bhavan) கட்டடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த தேவாலயத்திற்கான நிதியுதவியை சென்னையைச் சேர்ந்த டி.மாசிலாமணி குடும்ப த்தினர் வழங்கியுள்ளனர். தேவாலயத்தை ஆ. மொசஸ் ரக்ஸ் திறந்து வைத்தார்.
தேவனுடைய மகிமைக்காக அர்ப்பணிக்கப்பட்ட இவ்வாலயம், சுற்று வட்டார கிராம மக்களுக்கு ஆராதனைக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நிகழ் வில் பல்வேறு சமூக மக்கள் கலந்து கொண்டு, தேவ ஆசீர்வாதம் பெற்றனர்.