போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நாமக்கல்லில் புதிதாக ரூ.4.17 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நாமக்கல் (தெற்கு) வட்டார போக்குவரத்து அலுவலக புதிய கட்டடத்தினை திறந்து வைத்தார்.
வனத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் எ.கே.பி.சின்ராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் பெ.ராமலிங்கம் (நாமக்கல்), கு.பொன்னுசாமி (சேந்தமங்கலம்) உட்பட பலர் உள்ளனர்.