fbpx
Homeபிற செய்திகள்இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம்- நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஒருநாள் கடையடைப்பு போராட்டம்- நீலகிரி வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

இபாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என நீலகிரி மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானித்துள்ளது.

நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் கூட்டம் ஊட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பரூக் தலைமை தாங்கினார்.

இந்த கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் மே 30ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கான இ பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி நீலகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்டத் தழுவிய ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டம் மேற்கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்க செயலாளர் குலசேகரன், சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் விஜயன் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிகர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img