தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அவரு டைய பெருங்கனவு என்ன வென்றால், படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்பது தான்.
நமது மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்கு இளைஞர்களையே சாரும் என்பதால், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தரும் வகையில் தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும் படித்த இளைஞர்களுக்கு படிப்புக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தி தருவது தமிழக அரசின் முக்கிய குறிக்கோளாக இருந்து வருகிறது.
அதனடிப்படையில், நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பில் உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள இளைஞர்களுக்கு டி.என்.பி. எஸ்.சி, துறை தேர்வுகள், வங்கி பணிக்கான பயிற்சி வகுப்புகள் போன்றவற்றை சிறந்த பயிற்றுநர்கள் கொண்டு சிறப் பாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் வேலை நாடும் இளைஞர்களையும், வேலை அளிக்கும் நிறுவனங்களையும், இணைய வழியாக இணைத்து வேலைவாய்ப்புகளை பெற் றுத்தரும் நோக்கத்தில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின், வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவ மைக்கப்பட்ட இணையதளம் தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு (www.tnprivatejobs.tn.gov.in) இணையதளமாகும். இளை ஞர்கள் இந்த இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்து தங்களுக்கேற்ற பணி வாய்ப்புகளை பெறுவதற் கும், தனியார் துறை நிறுவனங் கள் தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் வழங்கு வதற்கும், இந்த இணையதளம் வழிவகை செய்து வருகிறது. தமிழ்நாடு அரசால் வேலை அளிப்போர் மற்றும் வேலை நாடுநர்களுக்கு இச்சேவை கட்டணம் ஏதுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பர் மாதத்தில் 07.12.2021 அன்று கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது. இம்முகாமில் 33 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 265 நபர்களை தேர்வு செய்யப்பட்டு, அந்த நிறுவனத்தின் மூலம் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
அதேபோல், 12.05.2022 அன்று உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்ற முகாமில் 165 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இதில் 5,912 வேலைநாடுநர்கள் பங்கேற்றதில், சுமார் 1,279 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் பெற்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, முதல மைச்சரின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் கலை ஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தும் அடையாளமாக இரண்டாவது வேலைவாய்ப்பு முகாம் குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 25.07.2023 அன்று நடைபெற்றது. இம்மு காமில், 125 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, ஏறக்குறைய 3,000 வேலைநாடுநர்கள் பங்கேற்றனர்.
இதில் 628 வேலை நாடுபவர்களை தேர்வு செய் யப்பட்டு, சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன், திறன் மேம் பாட்டுத்துறை அமைச்சர் ஆகியோரால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
வேலை வாய்ப்பு பெற்ற சிவக்குமார், கூறியதாவது:-
நான் குன்னூரில் வசித்து வருகிறேன். நான் கல்லூரி படிப்பினை முடித்து விட்டு, கிடைத்த வேலைகளை செய்துகொண்டே பல்வேறு இணையதளங்கள், நாளிதழ்களில் வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை பார்த்து வந்தேன். இத்தருணத்தில் உதகையில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தினசரி நாளிதழ்களின் மூலம் தெரிந்து கொண்டு, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டேன்.
என் தகுதியின் அடிப்படையில் எஸ்.பி.ஐ லைப் காப்பீட்டு (SBI LIFE INSURANCE) நிறுவனத்தில் DEVELOPMENT MANAGER பணியிடத்திற்கு நான் தேர்வு செய்யப்பட்டு, ரூ.25,000 மாத ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டேன். இந்த வேலை எனக்கு மிகவும் பிடித்துள்ளது.
இதனால் நான் மட்டும் அல்லாது எனது குடும்பமும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். மேலும் மாதம் மாதம் பெறும் எனது ஊதியத்தை சிறு சேமிப்பு செய்து வருகிறேன். இந்த சேமிப்பு தொகை எனது பிற்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதுபோன்று பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு வேலை நாடுபவர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
வேலை வாய்ப்பு பெற்ற சந்தியா கூறுகிறார்:-
நான் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் 25.07.2023 அன்று நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டேன். அங்கு 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் நடத்திய தேர்வில் தேர்ச்சிப்பெற்று, நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். இதில் எஸ்.பி.ஐ லைப் காப்பீட்டு நிறுவனத்தில் (SBI LIFE INSURANCE)
நிறுவனத்தில் DEVELOPMENT MANAGER பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்களின் பொற்கரங்களால் பணிநியமன ஆணை பெற்றது மற்றற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. தற்போது ரூ.25,000/ மாத ஊதியத்தில் பணிபுரிந்து வருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது மட்டுமல்லாமல், இந்த வேலைவாய்ப்பு கிடைத்த பிறகு எனது வாழ்க்கையில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்டங்கள் தோறும் வேலை வாய்ப்பு முகாமினை நடத்தி, வேலைநாடுபவர்களை சரியான வேலையில் அமர்த்தி அவர்களது வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேலைவாய்ப்பு பெற்ற பிற இளைஞர்களும் அவர்களது பெற்றோர்களும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள மனபூர்வமாக தெரிவித்துக் கொண்டனர்.
தொகுப்பு:
நி.சையத் முகம்மத்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்.
இரா.சரண்,
உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),
நீலகிரி மாவட்டம்.