நிர்மலா மகளிர் கல்லூரி தேசிய மீள்தர நிர்ணயக் குழுவினரால் ‘A++’ மதிப்பும் 4ம் தகுதிச் சுற்றில் சிஜிபிஏ 3.78 புள்ளிகளும் பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்த் துறை (அரசு உதவி பெறும் பிரிவு) சார்பில் இதழியல் களம் எனும் அமைப்பு கல்லூரியில் தொடங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், நிர்மலா மகளிர் கல்லூரியின் செயலர் அருட் சகோதரி குழந்தை தெரஸ், முதல்வர் அருட்சகோதரி மேரி பபியோலா ஆகியோர் முன்னிலை வகிக்க தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் மகேஸ்வரி வரவேற்புரை வழங்கினார்.
இதழியல் களத்தின் நோக்கம் குறித்து தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ராமதிலகம் எடுத்துரைத்தார்.
கோவை ரத்தினவாணி சமுதாய வானொலி நிலைய இயக்குனர் மூத்த ஊடகவியலாளர், முனைவர் ஜெ. மகேந்திரன் வானொலியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றுவதற்கானப் பயிற்சியை மாணவிகளுக்கு அளித்தார்.
இப்பயிற்சியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.