கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி 77வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இவ்விழாவிற்கு நிர்மலா கல்விக் குழுமத்தின் அருளன்னை பபியோலா மேரி தலைமை ஏற்று நடத்தினார். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள லயோலா கல்லூ ரியின் முதல்வரும், சேவியர் உயர்கல்வித் திட்டக்குழு இந் தியாவின் தலைவருமான பேராசிரியர் முனைவர் எஸ்.ஜே. ஜோஜி ரெட்டி சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார். சென்னை, குளோபல் பேமென்ட்ஸ் ஜோஹோ கார்ப்பரேஷன் பிரைவேட் லிமி டெட் நிறுவனத்தில் மூத்த மேலாளரும் நிர்மலா மகளிர் கல்லூரியின் முன்னாள் மாணவியுமான மார்கரெட் ஷிஜி வயலெட் பிரான்சிஸ் கௌரவ விருந்தினராக கலந்து கொண் டார்.
சென்னை, இன்ஃபோடெக் சர்வீசஸ் பிரைவேட் நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான சுஜாதா ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவிற்கு மேலும் சிறப்பு செய்தார்.
இதில் மாணவர் தலைவி வரவேற்புரை வழங்கினார். அதனைத்தொடர்ந்து கல்லூரி முதல்வர் ஆண்டு அறிக்கை வாசித்தார்.
ஷோகோ நிறுவனத்தின் குளோபல் கஸ்டமர் சக்ஸஸ் துறையின் இயக்குநர் தினேஸ் கண்ணா இவ்விழாவில் நிர்மலா மகளிர் கல்லூரியுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் கணினிப் பாடம் தொடர்பான துறைகளுக்குப் பாடத்திட்டம் வகுத்துக் கொடுத்தும் அதற்கேற்ற வகையில் ஆசி ரியர்களுக்குப் பயிற்சி அளிப் பதாகவும் உறுதியளித்து கையெ ழுத்திட்டார்.
தொடர்ந்து 2024-2025 கல்வியாண்டில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கும் புத்தகங்களும் சான்றிதழும் வழங்கப்பட்டன.