தேசிய தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளி (NIT Trichy) பெருமையுடன் அதன் சர்வதேச முன் னாள் மாணவர் சந்திப்பு 2025 நிகழ்வை அறிவிக்கிறது.
ஜனவரி 4, 2025 அன்று சென்னையில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் உள்ள என் ஐ டி திருச்சி முன்னாள் மாண வர்கள் கலந்து கொள்வார்கள்.
என் ஐ டி திருச்சி தனது சிறப்பான முன்னாள் மாணவர் வலையமைப்புடன் 48,000க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்களை கொண்டுள்ளது. இதில், 930க்கும் மேற்பட்ட தலைமைச் செயல் தலைவர்கள் (CEOS) மற்றும் 1,300க்கும் மேற்பட்ட நிறுவனர்/இணை நிறுவனர் அடங்குகின்றனர்.
இந்நிகழ்வில் ந.சந்திரசேகரன்- டாடா குழுமத்தின் தலைவர், முதன்மை விருந்தின ராகக் கலந்துகொள்கிறார்.
டாக்டர் பழனிவேல் தியாகராஜன் -தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் சேவைகள் அமைச்சர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றார்.
கோபி கள்ளயில் கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு தலைமை வணிக உளவியலாளர் முக்கிய உரையை வழங்குகிறார். இந்த புதிய முயற்சிக்கு முன்னாள் மாணவர்களின் அறிவு மற்றும் நிதி ஆதரவை பயனுள்ளதாக மாற் றுவதற்கான பல திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன.
இது குறித்து என் ஐ டி திருச்சி இயக்குநர் டாக்டர் ஜி. அகிலா கூறுகையில், “இந்த ஆராய்ச்சி மையம் மாணவர்களுக்கும் முன்னாள் மாணவர்களுக்கும் கருத்தாடல் மேடை வழங்கும் என்றார்.
RECAL தலைவர் கே.மகாலிங்கம் கூறுகையில், “எங்கள் முன்னாள் மாணவர் வலையமைப்பு உலகளாவியதாகவும் திறமையானதாகவும் உள்ளது” என்றார்.