கோவை சௌரிபாளையம் புனித பிலோமினாள் உயர்நிலைப்பள்ளியில் 2005ம் ஆண்டு படித்த மாணவ, மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழாசிரியை அமலி மறைவின் நினைவாக மரக்கன்று நடப்பட்டது.
கலைநிகழ்ச்சி மற்றும் விளையாட்டு போட்டிகளுடன் நடந்த இந்நிகழ்வில் பள்ளியின் முன்னாள் முதல்வர் அருள்சகோதரி கேத்ரின், தற்போதைய முதல்வர் அருள்சகோதரி செல்வி முன்னிலையில் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் திரளாக பங்கேற்று தங்கள் பழைய நினைவுகளை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.
பள்ளிக்கு சிசிடிவி கேமராக்களை அவர்கள் நன்கொடை அளித்தனர்.